கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்

(FASTNEWS|COLOMBO) – 4,286 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இந்த அறிக்கைகளுக்கு அமைய, 3,748 வெற்றிடங்கள் நிலவுகின்றதுடன், குறித்த இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் எஞ்சியுள்ள டிப்ளோமாதாரிகளை மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியைக் பயில்வதற்காக 8 ஆயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வியியல் பீடப் பிரிவு அறிவித்துள்ளது.