கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(07) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அதனை தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பாக ஸ்தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கியோருக்கு ஜனாதிபதியினால் பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.