கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் இடமாற்றம் இடை நிறுத்தம்

(FASTNEWS | COLOMBO) – கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்கவின் இடமாற்றத்தை, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இடை நிறுத்தியுள்ளது.

அதற்கமைய ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்க முன்னர் வகித்த பணிப்பாளர் பதவியே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி வெயீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்படும் புத்தகங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தான் சாட்சி வழங்கிய பின்னர் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்க முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.