ஹோமாகம மற்றும் கொட்டாவைக்கு இடையே பன்னிபிட்டிய – மாலபல்ல பகுதியில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியமை காரணமாக களனிவெளி புகையிரத போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளான புகையிரதத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் சிலாபம் மாதம்பே பிரதேசத்தில் புகையிரதத்தில் மாடு ஒன்று மோதியதால் இன்று(21) காலை சிலாபம் புகையிரத பாதையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.