(FASTNEWS|COLOMBO) – களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் நேற்று(13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று(13) காலை காதல் விவகாரம் காரணமாக கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.