களனி பாலத்திற்கு இடையிலான பகுதி கால வரையின்றி பூட்டு…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே குறித்த பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து களனி பாலத்தின் ஊடாக அதிவேக வீதியின் ஊடாக பெலியகொட நுழைவாயிலின் ஊடாக கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் வீதிக்கு பயணிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.