(FASTNEWS|COLOMBO) களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, கட்டுகுருந்த, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர், பெந்தொட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள வலயத்தில் அமைந்துள்ள மின்சார சபையின் அவசர திருத்தபணிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் திருத்த பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.