களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பிரேரணையொன்று அமைச்சரவையில் இன்று(21) முன்வைக்கப்படவுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் மூலம் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்கும் மாத்திரமே இடர் முகாமைத்துவ நிலையத்தினால் இழப்பீடுகளை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீ.எல்.எஸ். சேனாதீர குறிப்பிட்டார்.
எனினும், இந்நிலைமையை ஆராய்ந்து, அமைச்சரினால் பிரேரணையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கட்டுகுருந்த கடலில் நேற்று முன்தினம்(19) இடம் பெற்ற படகு விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.