களுத்துறை கோர பஸ் விபத்தில், 36பேர் காயம்

களுத்துறையில் இன்று புதன்கிழமை காலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை கட்டுகுருந்தை, பயாகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து காலி, ஹக்மனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், இன்னொரு பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான ஒரு பஸ் வண்டி அருகிலிருந்த கடையொன்றையும் உடைத்து தள்ளிக்கொண்டு போய் ஒரு வீட்டின் முன்பக்கத்தையும் தகர்த்து வரவேற்புக் கூடம் வரை உட்புகுந்துள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் பின்பக்கமாக ஓடி உயிர்தப்பியுள்ளனர்.

விபத்தின் காரணமாக மூன்று பெண்கள் உள்ளிட்ட 36 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.