களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான துப்பாக்கிச்சூடு – சந்தேகிக்கப்படும் வான் கண்டுபிடிப்பு…

களுத்துறை, மல்வத்த பிரதேசத்தில் கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சிறைச்சாலை பேரூந்து மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வான், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை, ​மொகரஹஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறையில், கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சிறைச்சாலை பேரூந்து மீது, சரமாரியாக நேற்று(27) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில், கைதிகள் ஐவரும், சிறைச்சாலை அதிகாரிகள் இருவருமென ஏழு பேர் பலியாகினர்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த நிலையில், படுகாயமடைந்த, மேலும் கைதியொருவரும், நான்கு அதிகாரிகளும் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.