களுத்துறை துப்பாக்கி சூடு – பிரதான கைதி ‘சமயங்’ தொடர்பில் சர்ச்சை…

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான ‘ரணாலே சமயா’ அல்லது சமயங் என அறியப்படும் அருண தமித் உதயங்க பத்திரண கைவிலங்கு அணியாமலே இருந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது வழமை. எனினும் பாதாள குழு நபரான தமித் உதயங்க அணியாமலே இருந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இரு பாதாள குழுத் தலைவர்களான ‘அங்கொட லொக்கா’ மற்றும் ‘கம்புறுபிட்டி மதுஷ்’ ஆகியோர் இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தெற்கில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் குறித்த நபர்கள் தொடர்புள்ளதாகவும் களுத்துறை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.