களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் ஆனந்த சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் கடமையில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.