களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(23) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐபெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.
இதன்மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.