களு கங்கை அண்டிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல..

(FASTNEWS | COLOMBO) – களு கங்கையில் கடல் நீர் கலந்துள்ளதால் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் பருகுவதற்கு உகந்த நிலையில் இல்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

உப்பு கலந்துள்ள அந்த நீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துமாறும், அந்தப் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக பவுசர் ஊடாக நீர் விநியோகிக்கப்படுவதாகவும் குறித்த சபையின் தலைவர் கே.எச். அன்சார் தெரிவித்திருந்தார்.