கள்ளவாக்கு போடச் சென்ற ஒருவர் கைது- முல்லைத்தீவில் சம்பவம்

இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட ஹிஜ்ராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் கள்ள வாக்கு போடுவதற்கு முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னொருவரின் வாக்குச்சீட்டு , அடையாள அட்டை என்பவற்றைக் கொண்டு சென்று வாக்களிக்க சென்றுள்ள போதே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன