தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகஎ நடிகை சன்னிலியோன், “தானே” பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார்.
பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னிலியோனின் புகைப்படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று பார்த்தால் மேலும் பல ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்செயலானது ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலசாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தனது உறவினர்கள் மற்றும் சட்டத்தரணியுடன் ‘தானே’ சைபர்செல் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று ஆஜரானார்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கு காத்திருந்த சன்னி லியோனை நேரில் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் பலர் முயன்றதால் அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருங்கூட்டம் கூடி, அமளி துமளி ஏற்பட்டது என்றால் பாருங்களேன்.