கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க முடிவு செய்த மற்றொரு நடிகை… (photo)

குடும்பப் பாங்காக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், ரெஜினா கெசன்ட்ரா, லாவண்யா திரிபாதி போன்றவர்கள் சக ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமர் வேடங்களில் நடிக்க துணிந்தனர். இதையடுத்து கமர்ஷியல் ஹீரோயின்களாக தாக்குப்பிடித்து வருகின்றனர்.

கந்த கோட்டை, துரோகி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2 போன்ற பல படங்களில் நடித்திருக்கும் பூர்ணா தனக்கென ஒரு பாலிசியை வகுத்துக்கொண்டு கிளாமர் எல்லைக்குள் செல்லாமல் குடும்பப்பாங்காக நடித்து வந்தார்.

இதற்கிடையில் உடல் எடையும் அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறைந்தன. இந்நிலையில், மீண்டும் தனது கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதுடன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கொடிவீரன் படத்தில் மொட்டையடித்து நடித்தவர், சவரக்கத்தி படத்தில் கெட்ட வார்த்தைகள் பேசி மாறுபட்ட பூர்ணாவாக மீண்டும் நுழைந்தார்

இதையடுத்து கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க முடிவு செய்து அதற்கேற்ப தனது தோற்றத்தையும் ஆடை வடிவமைப்புக்களையும் மாற்றி அமைத்திருக்கிறார்.

‘அவுனு’ என்ற தெலுங்கு திகில் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூர்ணா, தனது புதிய தோற்றத்தை வெளிக்காட்டும் வகையில் நவீன ஆடை அணிந்து போட்டோ செஷன் நடத்தினார்.