கஹடகஸ்திகிலிய விபத்தில் பெண் உயிரிழப்பு

கலேன்பிந்துனுவெவெ கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில்  பாதையை விட்டு விலகிய மோட்டார் சைக்கில் நடந்து சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் மற்றைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.