கஹவத்தை நகரில் சுமார் 60 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
நகரில் நேற்றும் சிறிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையிலான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அங்கு தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்