மீண்டும் இணைவார்களா சூர்யா – ஜோதிகா…

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற `காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதாற்கான பணிகள் ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது

வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது.

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கௌதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதிலும் சூர்யா – ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.