கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(15) எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் திகதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36% ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.
தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா பாஜக வேட்பாளரை விட பின் தங்கியுள்ளார். மாநில கட்சியான மஜத பெரும்பாலான இடங்களில் ஓட்டை பிரிக்கும் சக்தியாக இருப்பதால், இரு தேசிய கட்சிகளும் சமபலத்தில் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரை, காங்கிரஸ் 75 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.