காங்கேசன்துறையில் புதிய எண்ணெய்க் களஞ்சியம் அமைக்கத் திட்டம் – சந்திம வீரக்கொடி

காங்கேசன்துறையில் புதிய எண்ணெய்க் களஞ்சியம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் புதிய எண்ணெய் களஞ்சியம் அமைப்பதனால் வருடாந்தம் 300 மில்லியன் ரூபாவினை அரசாங்கத்தினால் சேமிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரதம் ஊடாக கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என அவர் கொழும்பு வானொலிச் சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.