பொலன்னறுவை பிரதேசங்களில், சேற்றில் புதைந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில், ஆராயவுள்ளதாக, வன ஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சேற்றில் புதைந்து உயிரிழந்த 07 யானைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 06 யானைகள் 12 வயதுக்குட்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் ஜபர என்ற மூலிகை தாவரங்கள் சேற்று நிலப்பகுதிகளில் காணப்படுவதால், அவற்றை அகற்றி வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு பிரதேசமாக குறித்த பிரதேசங்களை ஒதுக்குவது தொடர்பில், கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.