காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள்

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவில் ஏற்கனவே மூன்று உறுப்பினர்கள் இருந்ததாகவும் அந்த எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.