காணாமல் போனோர் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சரவை ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு இந்த உபகுழு ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று(05) சமர்ப்பிக்கப்பட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.