காணாமல் போதல் குறித்த சர்வதேச சாசனம் குறித்த சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட மாட்டாது..

காணாமல் போதலில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெறும் சர்வதேச சாசனம் குறித்த சட்ட மூலம் இன்று(05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது என
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த சாசனத்தை இலங்கையில் அமுலாக்குவதற்கு வழியமைக்கும் வகையில் அதற்கான சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

குறித்த சட்ட மூலத்தின் உள்ளடக்கங்கள் குறித்து தெளிவு பெறும் வரையில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.

(rizmira)