காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்ட மூலம் இன்று(23) சபாநாயகரால் கைச்சாத்திடப்படும் என நம்பப்படுகின்றது.
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெலவ மேற்கோள்காட்டி குறித்த இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி குறித்த இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள் இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.
இறுதி நேரத்தில் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கிய வரைவு, தற்போது தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று இந்த சட்ட மூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.