காணாமல் போன இரண்டாவது நபரின் சடலம் மீட்பு…

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் ஆற்றில் குதித்து காணாமல் போயிருந்த இரண்டாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது மூவர் ஆற்றில் பாய்ந்து தப்பியோடிய நிலையில், ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.

ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போயிருந்த இருவரில் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதுடன், இரண்டாவது நபரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.