காதலர்கள் அருவருக்கத்தக்க செயற்பாடு; பணம் பெற்ற பொலிஸ் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 30,000 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மேற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கார் ஒன்றில் இருந்த காதலர்கள் இருவர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக கூறி அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இவர்களை அச்சுறுத்தி சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதற்று 50,000 ரூபா தருமாறு கோரியுள்ளார்.

பின்னர், பின்னர் அந்த காதலர்களிடன் இருந்து 30,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாக மேற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் தென் மாவட்ட அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைக்கு பின்னர் இவர்களிடம் இருந்து பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொண்ட கல்கிசை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று இரவு 9.10 மணியளவில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.