காதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்நிலையில், காதலர் தினமான இன்று சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்திய ஆர்யா, தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதில் இருவீட்டாரது ஆசீர்வாதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாயிஷாவை கரம்பிடிப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் ஈடுபட்டு உள்ளனர்.