காதலர் தினத்தில் பத்தாயிரம் யுவ­திகள் கன்னித் தன்மையை இழக்கின்றனர்!

இலங்­கையில் 21 வய­திற்­குட்­பட்ட 9,400 யுவ­திகள் காதலர் தினத்தில் கன்னித் தன்­மையை இழக்­கின்­றனர். அத்­துடன் அத்­தி­னத்தில் 4,500 ரூபா­வுக்­குட்­பட்ட அறை­களில் 80 சத­வீதம் காதல் ஜோடி­க­ளுக்­காக முன்­ப­திவு செய்­து­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் ஆய்வின் மூலம் தெரிய வரு­கி­றது.

‘ஸ்கொட்­டி­ஷ் ஓர்பிட்’ நிறு­வனம் காதலர் தினப்­ப­ரிசுப் பொருட்கள் விற்­பனை நிலை­யங்கள், கருக்­க­லைப்பு நிலையம் மற்றும் வைத்­திய நிலை­யங்­களை அடிப்ப­டை­யாகக் கொண்டு நடத்­திய ஆய்வின் மூலமே குறித்த விடயம் தெரிய வந்­துள்­ ளது.

அந்த ஆய்வில் மேலும் தெரி­விக்­கப் ­பட்­டுள்­ள­தா­வது, காதலர் தினம் கொண்டா­டப்­படும் பெப்­ர­வரி 14 ஆம் திக­தி யில் குடும்பக் கட்­டுப்­பாட்டு சாத­னங்­களின் விற்­பனை இரு மடங்­காக அதி­க­ரிக்­கி­றது. மேலும் காதலர் தினத்தை அடுத்து வரும் 15, 16, 17 ஆம் திக­தி­களில் ஏரா­ள­மான யுவ­திகள் கருக்­க­லைப்பு செய்­து­கொள்­வ­தற்­காக கருக்­க­லைப்பு நிலை­யங்­க­ளுக்குச் செல்­வ­தா­கவும் தெரிய வரு­கி­றது.

மேலும் காதலர் தினத்தில் காத­லர்­க­ளுக்­கி­டையில் பரி­மா­றிக்­கொள்ளும் சிறந்த பரிசு பாலியல் ரீதி­யி­லான உறவு என்ற எண்­ணக்­க­ருவை தற்­கால இளை­ஞர்கள் மத்­தியில் சமூக வலைத்­த­ளங்கள் பரப்பி வரு­கின்­றன. எனவே அதனால் பாட­சாலை மாண­விகள் உட்­பட ஏரா­ள­மான யுவ­திகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆகவே காதலர் தினத்­துக்கு அடுத்து வரும் நாட்களில் யுவதிகளின் தற்கொலை வீதம் வழமையை விட இரட்டிப்பாவதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.