காதலுக்காக கட்டிப் புரண்டு சண்டை போட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரசியல்வாதியொருவர் பெண்ணொருவரின் காதலுக்காக இன்னொரு அரசியல்வாதியுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மகனும் ஒரே பெண்ணை விரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு பகிரங்கமாக கட்டிப் புரண்டு சண்டை போடுமளவுக்கு முற்றியுள்ளது.

அடிதடியின் பின்னர் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிசில் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு வருகை தந்திருந்த போதும், பின்னர் அது ஊடகங்களில் கசிந்து விட்டால் அவமானமாகி விடும் என்று கருதி தங்களுக்குள் சமாதானமாகி திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இவர்களின் சண்டை காரணமாக நட்சத்திர ஹோட்டலில் பத்தாயிரம் ரூபா பெறுமதியளவான சேதம் ஏற்பட்டிருப்பதால் அதனை செலுத்துமாறு ஹோட்டல் நிர்வாகம் இருவருக்கும் அறிவித்துள்ளது