தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார்.
கங்கனா ரனாவத் முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை காதலித்தார். ஒருமுறை தனது காதலை கங்கனா வெளிப்படையாக அறிவித்த போது அதை ஹிருத்திக் ஏற்க மறுத்தார். இதையடுத்து ஹிருத்திக் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸில் புகார் அளித்தார்.
தற்போது கங்கனாவின் வாழ்வில் புதிய காதலன் வந்து இருக்கிறார். இந்தி பத்திரிகைகள் இது பற்றி எழுதி வந்தன. அவர் யார் என்ற கேள்விக்கு கங்கனாவே பதில் அளித்துள்ளார்.
நான் என்றைக்குமே காதலைவிட்டு விலகி இருந்ததில்லை. தற்போதைக்கு காதலிக்கிறீர்களா என்கிறார்கள். என் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார்.
டேட்டிங் செல்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதற்காக அல்ல, என் வாழ்வில் எனக்கு பொருத்தமான ஒரு நபர் இருக்க வேண்டும். அதன் மூலம் என் வாழ்வை நான் சரியாக வழி அமைத்துக் கொள்வேன்.
நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். இந்தியாவில் ஒரு புறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை எனக்கு கவலை அளித்தாலும், எனக்கும் குழந்தை குடும்பம் வேண்டும் என்ற ஆசை உள்ளது இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.