மனித உரிமைகள் உருவாகுவது, காதல் (அன்பின்) ஊடாக மாத்திரமே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
“.. அன்பின் ஊடாகவே மனித உரிமைகள் உருவாக வேண்டும். தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெற்றால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படாது.. மோசடி, கள்ள வாக்குகள் என்பன நிறுத்தப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வேலையிருக்காது. அவ்வாறு அன்பினால் உருவாகும் மனித நேயமே நாட்டை வளப்படுத்தும்…” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.