ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் பல்கலைகழத்தின் கட்டிடத்தை தாக்கியதாகவும், துப்பாக்கி ஏந்திய நபர் சுடும் சப்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச் சத்தத்தில் அதிர்ந்ததாகவும், தாக்குதல்தாரி அதிரடியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியபோது பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


