முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 07ம் திகதி தொடக்கம் நாள்தோறும் நடாத்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று(02) தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கின் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாயை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக மூவடங்கிய சிறப்பு நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.