காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 07ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு…

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, நவம்பர் 07 ஆம் திகதியில் இருந்து தினந்தோறும் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் இன்று(23) தீர்மானித்துள்ளது.

முன்னதாக குறித்த வழக்கை இம்மாதம் 30ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.