கார் விபத்தில் பிரபல நடிகை பலி…

கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட்(29). சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்த வேளையில், வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிகாவின் தந்தை லாட்ஸ்(69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகா பால்கோல்டும் நேற்று(16) பரிதாபமாக மரணம் அடைந்தார். இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.