காலநிலையில் மாற்றம்..

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் ஓரளவு அதிக மழை வீழ்ச்சியை  எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று அதிகாலை அந் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்,  நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களிலும் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தின் விசேடமாக சபரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் எனவும்
வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.