காலநிலையில் மாற்றம் குறித்த அட்டவணை – வளிமண்டலவியல் திணைக்களம்

பொதுவாக முழு நாட்டிலும் குறிப்பாக மத்திய மலைநாடு மற்றும் கிழக்கு மாகாணம் என்பவற்றிலும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்போது, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களிலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசத்தில் சிறு காற்றும் வீசக் கூடும் எனவும் இதனால், இடி, மின்னலிலிருந்து பாதுகாப்புப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.