காலநிலையில் மாற்றம்…

நாட்டில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக சுமார் 75 மில்லிமீற்றர் மழை சில இடங்களில் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமாக காணக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய கடற்கரையோரங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(09) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.