நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையும், காற்று நிலைமையும் நாளை முதல் சிறிது குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 50 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என்று இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.