எதிர்வரும் 27 ஆம் திகதி கால எல்லை நிறைவடையவுள்ள மாகாண சபைகளை கலைத்துவிடவுள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று(19) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் சபையில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று(19) முன்வைக்கப்பட்டது. குறித்த இச்சட்ட மூலம் இதுவரை மாகாண சபைகளில் முன்வைக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
(rizmira)