காலிமுகத்திடல் தாக்குதல்: சதா நாலக்க கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலிமுகத்திடல் மே 09ஆம்திகதி தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சதா நாலக்க என அழைக்கப்டும் அசந்த நாலக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.

43 வயதான அசந்த நாலக்க ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டக்காரர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவியது இதனை அடிப்படையாகக் கொண்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அருகில் இராணுவப் பேருந்தை ஓட்டிச் சென்ற இவர், வீதியை மறித்து பின்னர் பேருந்திற்கு தீ வைத்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.