இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இன்று நாடாஅளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அதேசமயம் உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத…
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு – ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று(05)…