காலியில் உணரப்பட்ட நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – அனர்த்த முகாமை (Update)

காலி , ஹபுகல பிரதேசத்தில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் பலர் தெரிவித்துள்ள போதிலும், இப்பிரதேசத்திலோ நாட்டின் வேறு எங்குமோ நில அதிர்வுகள் தொடர்பான பதிவுகள் இதுவரை கண்டறியப்படவில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.