நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக காலி நகர சபைப் பகுதிக்கு குடிநீர் சேவையினை வழங்க முடியும் என காலி மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வைத்திய மற்றும் இராணுவ முகங்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்காக நீரினை வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
————————————————————— UPDATE
காலி நகர சபை பகுதியில் நீர் விநியோகம் துண்டிப்பு…
காலி நகர சபை பகுதியில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாகவே நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.