காலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் காலநிலை…

நாட்டின் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் காலநிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும்,
காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணக்கூடும் என்று திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.