கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய காதல்

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிய காதலி கிடைத்து விட்டார்.

ரொனால்டோ, கடந்த 5 ஆண்டுகளாக இகினா ஷாய்க் என்ற 29 வயது மொடல் அழகியை தீவிரமாக காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இருவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இவர்கள் சமீபத்தில் பிரிந்தனர்.

இந்நிலையில் ரோனால்டோ தற்போது 19 வயது டானிஷ் மொடல் அழகி மாஜா டார்விங் என்பவருடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தவிர, இருவரும் பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வருவதாகவும் போர்த்துக்கல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.

(riz)