கால்பந்து தரவரிசை – இங்கிலாந்து பெண்கள் அணி 5-வது இடத்திற்கு முன்னேறி வரலாற்று சாதனை

பெண்கள் உலகக்கோப்பை போட்டி சமீபத்தில் கனடாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை 1-0 என வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணி தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.

கால்பந்து வரலாற்றில் இதுவரை இங்கிலாந்து முதல் ஐந்து இடத்திற்குள் வந்தது கிடையாது. தற்போதுதான் முதன்முறையாக ஐந்தாவது இடத்திற்குள் வந்து வரலாற்று சாதனை படைத்தது.

இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணி வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதுதான் 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கா, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பெற்றது. ஜெர்மனி 2-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் 3-வது இடத்திலும், ஜப்பான் 4-வது இடத்திலுல் உள்ளது.

பிரேசில், ஸ்வீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நார்வே முறையே 6-வது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை உள்ளது.

(riz)